Enable Javscript for better performance
144 தடை உத்தரவு அமுல்: மாவட்ட ஆட்சியர் தீபக்குமார் தகவல் - Dinamani

சுடச்சுட

    

    144 தடை உத்தரவு அமுல்: மாவட்ட ஆட்சியர் தீபக்குமார் தகவல்

    By புதுச்சேரி  |   Published on : 23rd April 2014 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி மக்களவை தொகுதியில் மிக பதற்றம் நிறைந்த 30 வாக்குச்சாவடிகளிலும் வெளிப்புறத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும், தொகுதி தேர்தல் அலுவலருமான டாக்டர் தீபக்குமார் தெரிவித்துள்ளார்.

    தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:

    தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    மொத்தம் 905 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்திலும் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நேரடியாக கண்காணிக்கப்படும்.

    இணையதளம் மூலமும் எந்த வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவை கண்காணிக்கலாம்.

    மொத்தம் 77 பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் மிக பதற்றம் நிறைந்த 30 வாக்குச்சாவடிகளில் வெளிப்புறத்திலும் கண்காணிப்பு கேமரா வைக்கப்படும். இவற்றில் மத்திய துணை ராணுப்படையினர் பாதுகாப்பில் ஈடுபவர்.

    144 தடை உத்தரவு

    தேர்தல் அமைதியாக நடைபெற செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 24-ஆம் தேதி மாலை 6 மணி வரை புதுவை தொகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் கூட்டமாக ஓரிடத்தில் கூடக்கூடாது. தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மொத்தம் 3325 அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 905 வாக்குச்சாவடிகளில் 1900 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், 900 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

    100 சதம் புகைப்பட அடையாள அட்டை

    மொத்தம் புதுவயில் 901357 வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்கள் உள்பட அனைவருக்கும் 100 சதவீதம் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    அனைத்து வாக்காளர்களுக்கும் வணணப்படத்துடன் கூடிய வாக்குப்பதிவு சீட்டு வரைபட வசதியுடன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    மொத்தம் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 170 வழக்குகள் பதிவு செய்யப்படடுள்ளன.

    தேர்தல் பறக்கும் படையினரால் மொத்தம் ரூ.20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.52 லட்சம் மதிப்புள்ள பல்வேறு வகையான பொருள்கள்

    பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    விடுமுறை விட வேண்டும்

    தேர்தல் நாளன்று அனைத்து நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தீபக்குமார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai