சுடச்சுட

  

  புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தலைமை தேர்தல் அலுவலர் டி.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

  புதுவை தொகுதிக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடக்கிறது. மொத்தம் உள்ள 9,01,357 வாக்காளர்கள் 905 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர். 

  அவர்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறைகள், வரிசையில் நிற்க பந்தல்கள் மற்றும் சாய்தளப்படிகள் உள்ளிட்டவை வாக்குச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

   வாக்காளர்களுக்கு உதவிபுரியும் வகையில் வாக்காளர் உதவி மையங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.

   வாக்காளர்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் வாக்களித்து தங்களுக்குள்ள வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்றார் ஸ்ரீகாந்த்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai