சுடச்சுட

  

  இறுதிக்கட்டப் பிரசாரத்தில் விதி மீறல்: காங்கிரஸ், அதிமுகவினர் மீது வழக்கு

  Published on : 24th April 2014 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறியதாக காங்கிரஸ், அதிமுகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

  காங்கிரஸ் மீது வழக்கு: புதுவை கடற்கரை சாலை பழைய சாராய ஆலை முன்பு, காங்கிரஸ் வேட்பாளர் மத்திய அமைச்சர் நாராயணசாமி செய்வாய்க்கிழமை மாலை இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

  அவரது வாகனத்துடன்,

  500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில், கட்சிக்கொடி, தொப்பி சகிதம் திரண்டிருந்த தொண்டர்கள் அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பிரசாரத்தை நிறைவு செய்தனர். இதனால் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  இதனை கண்காணித்த தேர்தல் பறக்கும் படை உதவி வட்டாட்சியர் கோமன் ராஜாஜி, தேர்தல் விதிகளை மீறி, அதிக வாகனங்களுடன் சென்று பிரசாரம் செய்ததாக, வேட்பாளர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது புகார் கொடுத்தார்.

  அதன் பேரில், புதுவை பெரியகடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அதிமுகவினர் மீது வழக்கு: புதுவை அதிமுகவினர் அக்கட்சியின் வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை முதலியார்பேட்டை பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

  ஏஎப்ஃடி ஆலை சாலை வழியாக, 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கட்சியினர், கொடிகளுடன் திரண்டு பேரணியாக சென்று வாக்குச் சேகரித்தனர்.

  இவர்கள் தேர்தல் விதிகளை மீறி அதிக வாகனங்களுடன் சென்றதாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரி முரளி, போலீஸில் புகார் கொடுத்தார்.

  அதன் பேரில், முதலியார்பேட்டை போலீஸார், அதிமுகவினர் மீது தேர்தல் விதி மீறல் வழக்குப் பதிவு செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai