சுடச்சுட

    

    புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா புதன்கிழமை புஸ்தக் மந்திர் புத்தக நிலையத்தில் நடைபெற்றது.

    புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு ஏப்ரல் 23-ம் தேதி சர்வதேச அளவில் உலக புத்தக தினமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், உலக புத்தக தினம் புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் காந்தி வீதியில் உள்ள புஸ்தக் மந்திர் புத்தக நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். செயலர் சம்பத்குமார் வரவேற்றார். தலைவர் சுந்தர லட்சுமிநாராயணன் உலக புத்தக தினத்தை முன்னிட்டு, புத்தக வாசிப்பு பழக்கத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்களுக்குப் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

    வெற்றித் தமிழர் பேரவை அமைப்பாளர் கோவிந்தராசு சிறப்புரை ஆற்றினார். தாகூர் கலைக் கல்லூரி தத்துவத்துறைத் தலைவர் பார்த்தசாரதி பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் விஜயகுமார், ஞானசேகரன், அமிர்தலிங்கம், விவேகானந்தன், ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai