சுடச்சுட

  

  ஓட்டுக்கு பணம் வழங்கியவரை பிடித்த பறக்கும் படையினர் மீது தாக்குதல்

  Published on : 24th April 2014 06:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அருகே ஓட்டுக்கு பணம் வழங்கியவரை பிடித்த தேர்தல் பறக்கும் படையினர் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.

  புதுவை அருகே உள்ள கரையாம்புத்துôர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதனையடுத்து, புதுவை மக்களவைத் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த துணை வட்டாட்சியர் சந்தோஷ்குமார் தலைமையிலான குழுவினர், புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு கரையாம்புத்துôருக்கு காரில் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

  அப்போது கரையாம்புத்துôர் நேரு நகர் பகுதியில் திரண்டிருந்த அரசியல் கட்சியினர் சிலர், பறக்கும் படையினரைப் பார்த்து ஓட்டம் பிடித்துள்ளனர். அப்போது சிக்கிய அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை பறக்கும் படையினர் பிடித்துக்கொண்டு, கரையாம்புத்துôர் புறக்காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

  அங்கு போலீஸார் இல்லாததால், அங்கிருந்து மீண்டும் அதே வழியாக பாகூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். மீண்டும் நேரு நகர் பகுதியில் திரண்டிருந்த சிலர் பறக்கும் படை வாகனத்தை மறித்து அதில் பிடித்து வைத்திருந்த அப்பகுதியைச் சேர்ந்தவரை விடுவிக்கும்படி கேட்டுள்ளனர்.

  இதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர், பறக்கும் படையினரைத் தாக்கி, காரில் பிடித்து வைத்திருந்த நபரை மீட்டுள்ளனர். இதில் காயமடைந்த பறக்கும் படையைச் சேர்ந்த துணை வட்டாட்சியர் சந்தோஷ்குமார், உதவி சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், காவலர் கதிரேசன் உள்ளிட்ட 5 பேரும் வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி வந்துள்ளனர்.

  இதுகுறித்து, தகவல் அறிந்த புதுவை புறநகர் காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி, பாகூர் இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீஸார் கரையாம்புத்துôருக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதற்குள் பறக்கும் படையினரைத் தாக்கிய கும்பல் தலைமறைவானது.

  இதுகுறித்த புகாரின் பேரில், பாகூர் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai