சுடச்சுட

  

  கலர் டிவி வழங்குவதாக வாக்குறுதி: காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு

  Published on : 24th April 2014 06:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவைக்கு உள்பட்ட ஏனாம் பகுதியில் இலவச கலர் டிவி தரப்படும் என்று பிரசாரம் செய்ததாக காங்கிரஸ் எம்எல்ஏ மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

  புதுவைப் யூனியன் பிரதேசத்திற்கு உள்பட்ட ஏனாம் பகுதியில், அப்பகுதி எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில், காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக மக்களவைத் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது.

  கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஏனாம் கரியாலித்தப்பா பகுதியில் வாக்கு சேகரித்துப் பேசிய எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தால், இலவச கலர் டிவி தருவதாகக் கூறினாராம்.

  இதனை கண்காணித்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி கணேசன், இதுகுறித்து ஏனாம் போலீஸில் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் கொடுத்தார். இதன் பேரில், காங்கிரஸ் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ் மீது, தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களைக் கவரும் விதத்தில் வாக்குறுதியளித்ததாக தேர்தல் விதி மீறல் வழக்குப் பதிவு செய்தனர்.

  மற்றொரு வழக்கு: இதே போல் கடந்த திங்கள்கிழமை, ஏனாமில் உள்ள தனது வீட்டின் முன்பு பேசிய எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராôவ், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தேர்தல் விதிகளை மீறி வாக்குறுதியளித்து பேசியதாகத் தெரிகிறது.  இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி கணேசன் கொடுத்த புகாரின் பேரில், ஏனாம் போலீஸார் அவர் மீது மேலும் ஒரு தேர்தல் விதி மீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai