சுடச்சுட

  

  திருக்கனூர் அருகே தொடர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கினர். தீ விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

  திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு சின்னக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (40). செவ்வாய்க்கிழமை மாலை இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று வீசியதால் தீ மேலும் பரவி அருகே இருந்த ஜெகன்நாதன் என்பவரது வீடும் தீப்பிடித்து. தகவலறிந்த திருக்கனூர் தீயணைப்புத் துறையினர் நிலைய அதிகாரி லட்சுமணன் தலைமையில் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.  இதனையடுத்து, இரவு அதே பகுதியில் உள்ள சேகர் என்பவரது குடிசை வீடும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

  தொடர்ந்து புதன்கிழமை காலை அதே பகுதியில் உள்ள தண்டபாணி என்பவரது வைக்கோல் போரூம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கினர். 

  மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டாலும், மர்மமான முறையில் தீப்பிடித்தது குறித்து, திருக்கனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  தொடர் தீ விபத்து காரணமாக அப்பகுதியில், தீயணைப்பு வாகனம் ஒன்று முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai