சுடச்சுட

  

  தேர்தல் நாள்:விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம்

  Published on : 24th April 2014 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் செய்ய ஏதுவாக தொலைபேசி எண்களை தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

  நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அனைத்து தொழிற்சாலைகள், கடைகள், உணவகங்கள், இதர நிறுவனங்களின் உரிமையாளர்கள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் துறை ஆணையர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

  மேலும் தொழிலாளர்கள், தொழிற் சங்கங்களிடமிருந்து சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவித்தல் தொடர்பாக புகார்கள் கிடைக்கப் பெற்றால் புதுச்சேரி, காரைக்கால் மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் பணிபுரியும் தொழிலாளர் அதிகாரிகள், உதவி தொழிலாளர் ஆய்வர்களுக்கு ஆய்வு மேற்கொள்வதற்கு தொழிலாளர் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  மேலும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவித்தல் தொடர்பாக ஏதேனும் புகார் கொடுக்க விரும்பினால் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு கீழ்காணும் தொலைபேசி எண்களுக்கு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

  என்.ரவிச்சந்திரன், தொழிலாளர் அதிகாரி (அமுலாக்கம்) 9442543668, எஸ். கேதாரேஸ்வரவார், தொழிலாளர் அதிகாரி, (கட்டட நல வாரியம்)-9443458772. உதவி தொழிலாளர் ஆய்வாளர்கள் தொலைபேசி எண்கள்: ஜி.கணேசன்-9003836103, கே.ராஜ்குமார்-9095621284, பி.மகேந்திரவர்மன்-7299044646, ஆர்.ராஜவேல்-9940885151.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai