சுடச்சுட

  

  புதுச்சேரியை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் ஸ்ரீ மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாரன் முன்னிலை வகித்தார். முதல்வர் எஸ்.மலர்க்கண் வரவேற்றார்.

  மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி தமிழ்நாடு ஐசிடி அகாதெமி தலைமை இயக்கக அதிகாரி எம்.சிவக்குமார் பேசியதாவது:

  மாணவ, மாணவியர் தங்கள் வாழ்க்கையில் சிறந்த குறிக்கோள்களை கொண்டிருக்க வேண்டும். பாரதியார், விவேகானந்தர் ஆகியோர் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும். நாள்தோறும் ஒரு திருக்குறளைப் படித்து அதன்படி நடக்க வேண்டும்.

  வாழ்க்கையில் எதிர்படும் சவால்களையும், அழுத்தங்களையும் எதிர்கொள்ள வேண்டும். நேர்மை, கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

  கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 257 மாணவ, மாணவியர் டிசிஎஸ், சிடிஎஸ், விப்ரோ, எல் அன்ட் டி, சிஎஸ்எஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றனர்.

  இயக்குநர்கள் ராஜகோவிந்தன், வெங்கடாசலபதி, ஐசிடி அகாதெமி நிர்வாகிகள் சுரேஷ்பாபு, அழகிரி, வேலைவாய்ப்புத் துறை அலுவலர்கள் எம்.ஜெயக்குமார், வைத்தீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai