சுடச்சுட

  

  புதுச்சேரியை அடுத்த வில்லியனூரில் பிரசித்தி பெற்ற லூர்தன்னை மாதா கோயில் 137-வது ஆண்டுப் பெருவிழா வரும் 26-ம் தேதி தொடங்கி 9 நாள்கள் நடைபெறவுள்ளது.

  பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்கு பின் உலகிலேயே லூர்து மாதாவுக்கு எனக் கட்டப்பட்ட 2-வது தேவாலயம் வில்லியனூர் மாதா கோயிலாகும். உலகிலேயே போப்பாண்டவரால் மூடிசூடப்பட்ட சில சொரூபங்களில் வில்லியனூர் மாதாவும் ஒன்றாகும்.

  தமிழக பண்பாட்டின்படி தேவாலயம் முன்பு இயற்கையாக குளம் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.

  ஆண்டுப் பெருவிழா குறித்து வில்லியனூர் திருத்தல பங்குத்தந்தை ரிச்சர்ட் அடிகளார் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  பழமை வாய்ந்த லூர்தன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிக்கை முடிந்ததும், ஆண்டும் தோறும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.

  வரும் 26-ம் தேதி ஆண்டு பெருவிழாவை கேரள மாநிலம் சுல்தான்பேட்டை மறை மாநில புதிய ஆயர்  பீட்டர் அபீர் தொடங்கி வைக்கிறார். ஏற்கெனவே தேவாலயத்தில் இருந்த கொடிமரம் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதை அகற்றி விட்டு 63 அடி உயர புதிய கொடிமரம் பித்தளை கவசங்கள் அணிவிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. இதற்கு ரூ.7 லட்சம் செலவானது.

  புதிய கொடிமரத்தில் கொடியேற்றி டாக்டர் பீட்டர் அபீர் விழாவைத் தொடங்கி வைக்கிறார்.

  அதிகாலை 5.30 மணிக்கு ஆலய வளாகத்தில் உள்ள ஜெப மண்டபத்தில் திருப்பலி நடைபெறும். பின் மாதாகுளத்தைச் சுற்றி திருக்கொடி பவனி நடைபெறும். திருவிழா நாள்களில் மாலையில் திருப்பலி, மறையுரை தேர்பவனி போன்றவை நடைபெறுகின்றன.

  மே மாதம் 4-ம் தேதி காலை 7.30 மணிக்கு புதுவை-கடலூர் மறை மாவட்ட பேராயர் அந்தோனி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.

   இரவு 7.30 மணிக்கு ஆடம்பர திருவிழா தேர்பவனி நடக்கிறது. 5-ம் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு பின் கொடியிறக்கத்துடன் ஆண்டு விழா நிறைவடைகிறது.

  புதிதாக தேவாலயம்: தற்போதுள்ள தேவாலயக் கட்டடம் 137 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 500 பக்தர்கள் மட்டுமே அமர முடியும். இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், புதிய தேவாலயக் கட்டடம் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டப்படுகிறது. இதில் 5,000 பேர் அமரலாம் என்றார் ரிச்சர்ட்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai