சுடச்சுட

  

  புதுவை எலிமென்ட்ஸ் கலைக் கூடத்தில் ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

  புதுவை எல்லோரா நுண்கலை மற்றும் பண்பாட்டு அமைப்பின் தலைவர் ஆர்.ரவியின் ஓவியக் கண்காட்சி எலிமென்ட்ஸ் கலைக் கூடத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

  இக்கண்காட்சியை மாநில ஓவிய மன்றத் தலைவர் இபேர் திறந்து வைத்தார். எல்லோரா நுண்கலை அமைப்பின் தலைவர் எஸ்.அரியபுத்திரி தலைமை வகித்தார். செயலர் கா.முனிசாமி, துணைச் செயலர் ராஜ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஒருங்கிணைப்பாளர் இளமுருகன் வரவேற்றார். கலைமாமணி ஆர்.தாண்டவராயன், தமிழ்ச் சங்க செயலர் மு.பாலசுப்பிரமணியன், பேராசிரியர் பி.முருகவேல், யாத்ரா கலை நிறுவனம் சீனுவாசன், ஓவியர் சி.பரமேஸ்வரன் ஆகியோர் பேசினர்.

  ஓவியர்கள், வெளிநாட்டினர் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

  தொடர்ந்து வரும் மே 19-ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai