சுடச்சுட

  

  புதுச்சேரியில் லாஸ்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை காங்கிரஸ்-என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

  லாஸ்பேட்டை நெசவாளர் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (55). இவர் லாஸ்பேட்டை வட்டார காங்கிரஸ் செயலாளராக உள்ளார். வியாழக்கிழமை காலை தனது கட்சியினர் சிலருடன் வாக்களிப்பதற்காக சென்றார். அப்போது வழியில் இருந்த ஆளும் என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் வீட்டு முன்பு இருந்த அக்கட்சித் தொண்டர்களுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.

  லாஸ்பேட்டை பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியிலும், காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

  இதையடுத்து, காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஆறுமுகம் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். எம்எல்ஏ வைத்தியநாதன் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். காவல்நிலையத்துக்கு

  எம்எல்ஏ தரப்பினரும் வந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

  இதையறிந்த காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி அங்கு விரைந்து வந்து தொண்டர்களுக்கு ஆறுதல் கூறினார். வாக்குப் பதிவின் போது அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார்.

  ஐஜி பிரவீன் ரஞ்சன், எஸ்.பி. பிரவீண் திரிபாதி, இன்ஸ்பெக்டர் வரதராஜ், எஸ்.ஐ. இளங்கோ மற்றும் போலீஸார் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக

  கூறியதால் காங்கிரஸார் கலைந்து சென்றனர்.

  பின்னர் ஆளும் கட்சி பொதுச்செயலர் பாலன், எம்.எல்.ஏக்கள் ஜி.நேரு, கல்யாணசுந்தரம் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

  இச்சம்பவத்தால் லாஸ்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai