சுடச்சுட

  

  காரைக்காலில் வாக்களித்த அதிமுக, திமுக வேட்பாளர்கள்

  By காரைக்கால்  |   Published on : 25th April 2014 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.எச். நாஜிம், அதிமுக வேட்பாளர் எம்.வி. ஓமலிங்கம் ஆகியோர் காரைக்காலில் உள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்தனர்.

  அதிமுக வேட்பாளர் எம்.வி. ஓமலிங்கம், கோட்டுச்சேரியில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

  பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

  பிரசாரத்தில் பார்த்த எழுச்சி அதிமுக வெற்றி பெறப்போவதை உறுதிபடுத்தியது. புதுவை தொகுதியில் நிச்சயம் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறுவது உறுதி என்றார் ஓமலிங்கம்.

  திமுக வேட்பாளர் ஏ.எம்.எச். நாஜிம், காரைக்கால் கோத்துக்குளம் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: புதுவையில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. எங்கள் கட்சியின் கூட்டணித் தலைவர்கள், தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதுவையில் இரண்டு சாமிகளையும் (ரங்கசாமி, நாராயணசாமி) தோல்வியடையச் செய்யும் வல்லமை திமுகவுக்கு உண்டு என்றார்.

  புதுவை பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் கூறும்போது, கடும் விமர்சனத்தை காங்கிரஸ் யார் மீதும் செய்யவில்லை. காங்கிரஸ் நிச்சயமாக வெற்றிபெறும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai