சுடச்சுட

  

  புதுவையில் வீட்டின் முன்பு நின்றிருந்த கார் வியாழக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்ததாக கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  புதுவை முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராஜகோபால்(40). ஆரோவில் பகுதியில் காலணி கடை வைத்துள்ளார். இதற்காக வீட்டில் லெதர் பொருள்களை வாங்கி வந்து காலணி உற்பத்தி செய்து வருவதாகத் தெரிகிறது.

  வீட்டிலிருந்து பொருள்களை கடைக்கு ஏற்றிச் செல்ல தனது காரை பயன்படுத்தி வந்தார்.

  வழக்கம் போல், புதன்கிழமை இரவு கடைக்குச் சென்று திரும்பிய ராஜகோபால், காரை வீட்டின் முன்பு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.

  உடனே அங்கு திரண்ட மக்கள் தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது. காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

  இது குறித்து ராஜகோபால் கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி

  வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai