சுடச்சுட

  

  தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல்:இரண்டு பேர் கைது

  By புதுச்சேரி,  |   Published on : 25th April 2014 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை அருகே தேர்தல் பறக்கும் படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இரண்டு பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

  புதுவை அருகே உள்ள கரையாம்புத்தூரில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த துணை வட்டாட்சியர் சந்தோஷ்குமார் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை மாலை சென்று சோதனை நடத்தினர்.

  கரையாம்புத்தூர் நேரு நகரில் பணம் வழங்கிக் கொண்டிருந்த சிலர் பறக்கும் படையினரைப் பார்த்தவுடன் ஓட்டம் பிடித்தனர்.

  அதில் பிடிபட்ட அதே பகுதியைச் சேர்ந்த துரை என்பவரை பாகூர் காவல் நிலையத்துக்கு பறக்கும் படையினர் அழைத்துச் சென்றனர்.

  இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் பறக்கும் படையினர் வாகனத்தை மறித்து, அதிகாரிகளைத் தாக்கி, காரிலிருந்த துரையை மீட்டுள்ளனர். இது குறித்து பறக்கும் படை துணை வட்டாட்சியர் சந்தோஷ்குமார் பாகூர் போலீஸில் புகார் கொடுத்தார்.

  இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீஸார் கரையாம்புத்தூரில் விசாரணை நடத்தினர்.

  விசாரணையின் பேரில் பாகூர் போலீஸார் கரையாம்புத்தூரைச் சேர்ந்த துரை, அவரது மனைவி லட்சுமி, மகன் மகேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், துரையின் உறவினர்களான முருகன், சிவபாலன் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  இதனையடுத்து, தலைமறைவாக உள்ள துரை உள்ளிட்டோரைத் போலீஸார் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai