சுடச்சுட

  

  பண விநியோகம்: என்.ஆர். காங்கிரஸை சேர்ந்த அரசு ஊழியர் கைது

  By காரைக்கால்  |   Published on : 25th April 2014 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநள்ளாறில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தபோது என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கல்வித் துறை தினக்கூலி ஊழியரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

  காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருவதாக, திருநள்ளாறு போலீஸாருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

  காவல் உதவி ஆய்வாளர் அனில்குமார் தலைமையில் போலீஸார் சுரக்குடி பகுதிக்குச் சென்றபோது, சுரக்குடி, தெற்கு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகியும், கல்வித்துறையில் தினக்கூலி ஊழியராகப் பணியாற்றி வரும் பால்பாண்டி (எ) பாலசுப்பிரமணியன் (43), வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்தார்.

  இதையடுத்து, போலீஸார் அவரிடமிருந்த ரூ. 1 லட்சத்து 200 பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், மாவட்ட தேர்தல் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai