சுடச்சுட

  

  தேர்தல் துறையின் நடவடிக்கை காரணமாக அரசு, தனியார் நிறுவனங்கள், திரையரங்குகளுக்கு விடுமுறையளிக்கப்படதால் பெரும்பாலான வாக்காளர்கள் வாக்குப்பதிவில் பங்கேற்றனர்.

  வாக்குச் சாவடிகள் அதிகம்: புதுவை மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவுற்றது. புதுவையில் 659-ம், காரைக்காலில் 151-ம், மாஹோவில் 32-ம், ஏனாமில் 33 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த முறை கூடுதலாக 30 துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 905 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

  வாக்குச் சாவடிகளில் வசதி: அனைத்து வாக்குச் சாவடிகளிலும், மக்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக கீற்று கொட்டகைகள், சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தன.

  குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த முறை அருகருகே வாக்குச் சாவடிகள் அமைந்ததால், வாக்காளர்கள் கூட்ட நெரிசலின்றி வந்து வாக்களித்துச் சென்றனர்.

  தனியார் நிறுவனங்கள் விடுமுறை: தேர்தலில் அனைத்து தரப்பினரும் வாக்களிப்பதை உறுதி செய்திட தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. தனியார் நிறுவனத்தினர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அப்படி விடுமுறை வழங்காமல், இடையூறாக இருந்தால் தொழிலாளர் துறைக்கு தகவல் தெரிவிக்கலாமென்று உத்தரவிட்டிருந்தது.

  இதனால், இந்த முறை புதுவையில் அனைத்துத் தனியார் நிறுவனங்கள், கடைகள், சிறு தொழில் நிறுவனங்கள் விடுமுறையளிக்கப்பட்டிருந்தன. டீ கடைகள் கூட அதிகளவில் மூடப்பட்டிருந்தன. புதுவை முழுவதும் கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

  திரையரங்குகள் விடுமுறை: புதுவை திரையரங்குகளில் பகல் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பல திரையரங்குகள் வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்பட்டதால், அங்கு புதன்கிழமை முதலே காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

  பேருந்துகள் நிறுத்தம்: தேர்தலையொட்டி, பெரும்பாலான தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்ததால், புதுவை பேருந்து நிலையத்தில் வெளியூர் பயணிகள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.

  புதுவை தேர்தல் துறையினரின் நடவடிக்கை காரணமாக வாக்காளர்கள் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் வந்து வாக்களித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai