சுடச்சுட

  

  புதுச்சேரி தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்களுக்குத் தேவையான வசதிகளை தேர்தல் துறை சார்பில் செய்யப்பட்டிருந்தது.

  நாடாளுமன்றத் தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது.

  தேர்தல் களத்தில் 30 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குப்பதிவுக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

  புதுச்சேரியில் 684, காரைக்காலில் 154, மாஹேயில் 32, ஏனாமில் 35 என மொத்தம் 905 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பயன்படுத்துவதற்காக 2,800 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.

  தேவையான வசதிகள்: வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வெயிலில் நிற்காமல் இருக்கத் தேவையான இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. முதியோர் வரிசையில் நிற்க முடியாது என்பதால் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்தளங்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தன.

  இதனால் பொதுமக்கள் நிம்மதியாக வாக்களித்தனர். தேர்தல் துறையின் ஏற்பாடுகளை பாராட்டினர்.

  வெப் கேமரா மூலம் கண்காணிப்பு: அனைத்து வாக்குச் சாவடிகளிலும்,வாக்குப்பதிவை கண்காணிக்க வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் 89 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு, இந்த ஓட்டுச் சாவடிகளில் மிகவும் பதற்றம் நிறைந்த 30 சாவடிகளில் வெளியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

  4 ஆயிரம் போலீஸார்: தேர்தல் பணியில் 3,235 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் 7 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 4 ஆயிரம் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai