சுடச்சுட

    

    வாக்குக்கு பணம் வழங்கியதாக காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸார் கைது

    By புதுச்சேரி,  |   Published on : 25th April 2014 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலையொட்டி வாக்குக்கு பணம் வழங்கியதாக காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    என்.ஆர். காங்கிஸ் பிரமுகர்கள் கைது: புதுவை காலாப்பட்டு போலீஸார், தேர்தல் விநியோகத்தை தடுக்கும் வகையில், தலைமைக் காவலர் லூர்துநாதன் தலைமையில் புதன்கிழமை இரவு ஆய்வு செய்தனர்.

    அப்போது, பிள்ளைச்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவில், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்குக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சிவக்கொழுந்து(51), முத்தப்பன் மகன் மகேஷ் (19) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.9,700 பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கிரஸ் பிரமுகர் கைது: வில்லியனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாசிலாமணி தலைமையிலான குழுவினர் புதன்கிழமை இரவு சோதனை செய்தனர். அப்போது, அருகே உள்ள கணுவாப்பேட்டை திருக்காஞ்சி சாலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தபடி, வாக்குக்கு பணம் வழங்கிய கனுவாப்பேட்டை கப்பக்காரத் தெருவைச் சேர்ந்த கஜேந்திரனை (34) பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வில்லியனூர்

    போலீஸார் கஜேந்திரனை கைது செய்து அவரிடமிருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai