சுடச்சுட

    

    விதிகள் மீறி பிரசாரம்:என்.ஆர். காங்கிரஸ் மீது வழக்கு

    By புதுச்சேரி,  |   Published on : 25th April 2014 03:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை அருகே தேர்தல் விதிகளை மீறி அதிக வாகனங்களில் சென்று பிரசாரம் செய்ததாக என்.ஆர். காங்கிரஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுவை அருகே உள்ள சேதராப்பட்டில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து கரசூர் சாலையில் 50-க்கும்

    மேற்பட்ட வாகனங்களில் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    தேர்தல் விதிகளை மீறி அதிக வாகனங்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி இளந்திரையன் புதன்கிழமை புகார் கொடுத்தார். இதன்பேரில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மீது சேதராப்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai