சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக புதுச்சேரி நகரம் பந்த் போல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

  தேர்தலை முன்னிட்டு, அனைத்து உணவகங்கள், தொழில் நிறுவனங்கள், ஆலைகள் உள்ளிட்டவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை விட வேண்டும் என தொழிலாளர் துறையும், தேர்தல் ஆணையமும் உத்தரவிட்டது.

  இதன்படி புதுச்சேரியில் அனைத்து நிறுவனங்களும் விடுமுறை விடப்பட்டன.

  ஹோட்டல்கள், பெரிய வணிக வளாகங்கள், நகைக் கடைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியன மூடப்பட்டிருந்தன. இதனால் முக்கிய கடைவீதிகளான நேரு வீதி, மகாத்மா காந்தி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகள் வெறிச்சோடி கிடந்தன.

  பந்த் நடைபெற்றது போல் புதுவை நகரம் அமைதியாகக் காணப்பட்டது.

  பேருந்து சேவை குறைப்பு: தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலிருந்து புதுவைக்கு இயக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் சேவை குறைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிறிது பாதிப்படைந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai