சுடச்சுட

  

  காரைக்காலில் 105 வயது முதியவர் ஆர்வமாக குடும்பத்தார் உதவியுடன் வியாழக்கிழமை வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

  காரைக்கால் மாவட்டம், விழுதியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜி. சோமசுந்தரம் (105). இவர் விழுதியூர் அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய வந்தார். அவரது மகன்கள் சிவானந்தம், தியாகராஜன் ஆகியோர் நாற்காலியில் அவரை உட்காரவைத்து, நாற்காலியுடன் வாக்குச்சாவடிக்குள் தூக்கிச் சென்றனர்.

  வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் தமது ஆவணத்தைக் காட்டி கைரேகை பதிவு செய்த அவரை வாக்காளிக்கும் அறைக்கு தூக்கிச் சென்று உட்காரவைத்தனர். கண் கண்ணாடி அணியாமல் இயந்திரத்தில் உள்ள வேட்பாளர் பெயர், சின்னத்தைப் பார்த்து வாக்கைப் பதிவு செய்தார். பிறகு, குடும்பத்தார் அவரை வாக்குச்சாவடிக்கு வெளியே அழைத்து வந்தனர்.

  அவர் கூறும்போது, வாக்குப் பதிவுக்கான அதிகாரம் கிடைத்த வயதிலிருந்து தொடர்ந்து வாக்களித்து வருகிறேன். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். வயது முதிர்வு ஏற்பட்டாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் கண்டிப்பாக வாக்களிப்பதை செய்து வருகிறேன் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai