சுடச்சுட

    

    3 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்

    By புதுச்சேரி,  |   Published on : 25th April 2014 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் 37 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 3 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன என ஆட்சியரும், தொகுதி தேர்தல் அலுவலருமான தீபக்குமார் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் வியாழக்கிழமை இரவு பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தேர்தல் புறக்கணிப்பு செய்த வீராம்பட்டினம் கிராமத்தில் ஒரு பிரிவினர் வாக்களிக்க வேண்டும் என விரும்பினர். இந்நிலையில் மோதல் ஏற்படாமல் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். மொத்தம் 5 வாக்குச் சாவடிகளில் மாலை வரை 37 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

    புதுச்சேரியை அடுத்த சாணார்பேட்டை, சுல்தான்பேட்டை, நைனார்மண்டபம் ஆகிய வாக்குச் சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன.

    புதுச்சேரி தொகுதியில் தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 82.2 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

    இதில் புதுவை பிராந்தியத்தில் 82.34 சதவீதம், காரைக்காலில் 76.36 சதவீதம், மாஹேயில் 70.15 சதவீதம், ஏனாமில் 89.29 சதவீதமும் பதிவாயின.

    ஆண்கள் 81.51 சதவீதமும், பெண்கள் 82.74 சதவீதமும் வாக்களித்தனர்.

    தேர்தலின்போது எந்த அதிகாரிகளும் மாற்றப்படவில்லை. பண நடமாட்டத்தைத் தடுக்க தேர்தல் துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டது.

    மொத்தம் 480 புகார்கள் பெறப்பட்டதில் 200 புகார்கள் மீது விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றார் தீபக்குமார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai