சுடச்சுட

  

  சென்டாக் கலந்தாய்வு காலதாமதம்:மாணவர்கள் பாதிப்பு

  By புதுச்சேரி  |   Published on : 26th April 2014 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் பொறியியல், மருத்துவக் கல்வி மாணவர்களுக்கான சென்டாக் கலந்தாய்வை காலதாமதமாக நடத்துவதால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  புதுச்சேரியில் ஒருங்கிணைந்த தேர்வுக்குழு (சென்டாக்) மூலம் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீடு நிரப்பப்படுகிறது. புதுச்சேரியில் அரசு ஒதுக்கீடுகளை பொறியியல், மருத்துவப் படிப்புகளை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் காலதாமதமாகவே தொடங்கி நடத்தப்படுகிறது.

  நடப்புக் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 9-ம் தேதி வெளியாக உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள சுமார் 2 லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்களை நிரப்ப முதல் கட்ட கலந்தாய்வை தொடங்க உள்ளது. மே 3ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் தரப்படும் என தெரிவித்துள்ளது.

  ஆனால், புதுச்சேரியில் இதுபோல் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. சென்டாக் மூலம் கல்லூரிகளில் சேருவோருக்கு அரசே கல்விக் கட்டணத்தை செலுத்தி விடுகிறது. இதனால், பல ஏழை மாணவ, மாணவிகள் உயர்கல்வியை அரசு கட்டணத்தில் படிக்க முடியும்.

  இதுதொடர்பாக புதுச்சேரி மாணவர்-பெற்றோர் நலவாழ்வு சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியது:

  புதுச்சேரியில் சென்டாக் கலந்தாய்வு காலதாமதமாகதான் நடக்கிறது. இதனால் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் கூட, தாங்கள் விருப்பப்படும் பாடப்பிரிவு, நல்ல கல்லூரிகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அதிக நன்கொடை அளித்து தனியார் கல்லூரிகளில் சேரும் நிலை நீடிக்கிறது.

  கடந்த 1.8.2013ஆம் தேதி வெளியான அரசாணையில் 2012-13ஆம் ஆண்டில் பொறியியல் படிப்புக்கு 2,378 பேரும், 2013-14-ல் 1,851 பேரும் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்டாக்கின் காலதாமத கலந்தாய்வுதான் இந்த எண்ணிக்கைக் குறைவுக்குக் காரணம். இந்த ஆண்டும் காலதாமதமாக சென்டாக் கலந்தாய்வு நடைபெற்றால் அரசு நிதியுதவி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். பல ஏழை மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள்.

  எனவே சென்டாக் கலந்தாய்வை காலத்தோடு நடத்தி அரசு இடங்களை நிரப்ப வேண்டும்.

  மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணங்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும். புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளில் 300 இடங்கள் உள்ளன. இதில் அரசுக்குரிய இட ஒதுக்கீட்டையும் பெறவேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai