சுடச்சுட

  

  ஜிப்மர் மருத்துவமனையில் இன்று பட்டமளிப்பு விழா

  By புதுச்சேரி,  |   Published on : 26th April 2014 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் 5-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி அரங்கத்தில் நடக்கிறது.

  இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் டி.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜிப்மர் மருத்துவமனை கடந்த 1956ஆம் ஆண்டு பிரெஞ்சு தூதரால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடக்கத்தில் தன்வந்திரி மருத்துவக் கல்லூரி எனவும் பெயரிடப்பட்டது.

  பின்னர் மத்திய அரசு சுகாதாரத் துறையின் கீழ் வந்த போது ஜிப்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

  தற்போது 50 ஆண்டுகளை ஜிப்மர் மருத்துவமனை நிறைவு செய்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி ஜிப்மர் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக மாற்றப்பட்டது.

  ஜிப்மர் மருத்துவமனை 8 பாடப்பிரிவுகளில் பிஎச்டி படிப்புகளும், 16 வகையான சிறப்பு மருத்துவப் பிரிவுகள், 24 வகையான முதுகலை பட்டமேற்படிப்பு பிரிவுகளும் உள்ளன.

  ஜிப்மர் மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். பாடப் பிரிவில் 150 இடங்கள் உள்ளன. இதற்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.

  முதல் பட்டமளிப்பு விழா கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. நடப்பாண்டு பட்டமளிப்பு விழாவில் 86 எம்.பி.பி.எஸ். பாடத்தை முடித்தவர்கள் முதன்முறையாக பட்டங்களை பெறுகின்றனர். பட்ட, பட்டமேற்படிப்பு பாடங்களை நிறைவு செய்த 368 பேர் பட்டங்களை பெறுகின்றனர்.

  மருத்துவமனை தலைவர் டாக்டர் மகாராஜ் கிருஷ்ண பான் தலைமை தாங்குகிறார். இங்கிலாந்து நாட்டின் துணைதூதர் பரத் சுரேஷ் ஜோஷி பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai