சுடச்சுட

  

  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி வகுப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 26th April 2014 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிறுவனம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன என அதன் முதல்வர் தெ.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் ஒரு அங்கமாக உள்ள மேலாண்மை நிலையம் கடந்த 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள், சான்றிதழ், பட்டய, பட்ட வகுப்புகளை நடத்தி வருகிறது.

  கடந்த 1997ஆம் ஆண்டு முதல் கணினி சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. கடந்த 2011 முதல் கோவை பாரதியார் பல்கலைக்கழகதுடன் இணைந்து எம்பிஏ, எம்சிஏ, பிசிஏ, பிஎஸ்சி, போன்ற வேலைவாய்ப்பு சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

  மத்திய அரசின் தேசிய நிறுவனமான சஐஉகஐப-ன் கணினி வழித்தேர்வு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் நடத்தி வருகிறது. புதுவை அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும், புதுவை தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலமாக கணினி பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது.

  இதன் தொடர்ச்சியாக புதுவை வாழ் பெற்றோரின் நீண்ட நாள்கள் கோரிக்கையான கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு புதுவை அசிமுத்து மென்பொருள் அகாதெமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அடிப்படை ஓவியம் வரைதல் பயிற்சி, அனிமேஷன், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், இசை, வெப் டிசைனிங், கிலோ மாடலிங், டிடிபி மற்றும் கணினி சார்ந்த வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன.

  மேலும் 80 மணி நேர பகுதி நேர சான்றிதழ் பயிற்சியான இர்ன்ழ்ள்ங் ர்ய் இர்ம்ல்ன்ற்ங்ழ் ஸ்ரீர்ய்ஸ்ரீங்ல்ற்ள் வகுப்புகளும் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோடைகால பயிற்சிகளில் சேரும் கூட்டுறவுச் சங்க மற்றும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு சலுகையாக கட்டணத்தில் 10 சதவீதம் வழங்கப்படும்.

  இந்த பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மற்றும் மே மாதம் முழுவதும் நடைபெறும். பயிற்சி வகுப்புகள் தொடர்பான விண்ணப்பங்கள், விவரங்களுக்கு, கதவு எண் 62, சுய்பேரன் வீதியில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை அணுகவும். மேலும் 0413-2331408, 2220105, 9655522288 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai