சுடச்சுட

  

  பாரதிதாசன் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு

  By புதுச்சேரி,  |   Published on : 26th April 2014 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாரதிதாசன் மகளிர் கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

  புதுச்சேரியில் 23 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாரதிதாசன் அரசு கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு அங்குள்ள பாதுகாப்புப் பெட்டக அறையில் நள்ளிரவு வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

  மாவட்டத் தேர்தல் அதிகாரி தீபக்குமார் முன்பு அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டன. இதையடுத்து அம்மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

  இம்மையம் சிசிடிவி கேமிரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொகுதி தேர்தல் அலுவலர் தீபக்குமார் தெரிவித்தார்.

  4 பிராந்தியங்களில் ஏற்பாடு: புதுவையின் இதர பிராந்தியங்களான காரைக்காலில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இயந்திரங்கள் அறிஞர் அண்ணா கல்லூரியிலும், மாஹே சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஏனாம் தொகுதிக்கான இயந்திரங்கள் சிவில் ஸ்டேசனிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

  புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் நடக்கிறது.

  இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், வேட்பாளர்கள் விரும்பினால் மாவட்டத் தேர்தல் ஆணைய அனுமதி பெற்று வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்க்கலாம்.

  வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியாட்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் நுழைய அனுமதியில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai