சுடச்சுட

    

    புதுவை அருகே மினி டெம்போ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.

    புதுவை கிருமாம்பாக்கம் ஆதிக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அரிபுத்திரி மகள் சரண்யா(30). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரைப் பார்க்க வெள்ளிக்கிழமை காலை செல்லஞ்சேரியிலிருந்து உறவினர்கள் மினி டெம்போவில் வந்துள்ளனர்.

    கிருமாம்பாக்கம் சாராயக்கடை அருகே வந்தபோது, குறுக்கே வண்டி மாடு வந்ததால், டெம்போ ஓட்டுநர் வாகனத்தை திருப்பினாராம். இதில், அந்த டெம்போ சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் கிருஷ்ணம்மாள், மச்சகாந்தி, குப்புசாமி, அந்தோணி, சரவணன் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இவர்கள், புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai