சுடச்சுட

  

  மின் துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்து அரியாங்குப்பத்தில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

  புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் மாதா கோயில் அருகே ஒரு மின்மாற்றி உள்ளது. இது மிகவும் பழமையானதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. மேலும் இதனால் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு சுற்றுப்புறத்தில் உள்ள மாதா கோயில் வீதி, பூர்ணாங்குப்பம் சாலை, மணவெளி சாலை, சுப்பைய்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.

  மேலும் கடந்த சில நாள்களாக அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. புதன்கிழமை இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையும் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கொதிப்படைந்தனர்.

  இதையடுத்து, மின்மாற்றியை உடனே மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரியாங்குப்பம் மின் துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அங்கு மின்துறை ஊழியர்கள் அளித்த பதிலால் அதிருப்தி அடைந்த அவர்கள், பைபாஸ் சாலையில் மறியல் செய்தனர். இதனால் கடலூர் தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஊரக எஸ்.பி. தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மின் துறை பொறியாளர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai