சுடச்சுட

    

    வாக்குச் சாவடியில் விதிமீறல்: பூத் ஏஜெண்ட் மீது வழக்கு

    By புதுச்சேரி  |   Published on : 26th April 2014 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பக்கத்து வாக்குச் சாவடியில் நுழைந்த பூத் ஏஜெண்ட் மீது தேர்தல் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

    புதுவை காலாப்பட்டு பிள்ளைச்சாவடி சிறப்பு பள்ளி வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது, பகல் 12.30 மணிக்கு, என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜெண்டான குமரேசன் (39), பக்கத்து வாக்குச் சாவடிக்குச் சென்று, ஓட்டுச் சதவீதம் என்ன என்று கேட்டதாகத் தெரிகிறது.

    இதில், வாக்குச் சாவடி அலுவலர் பொன்னுரங்கத்துக்கும், அவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பொன்னுரங்கம் கொடுத்த புகாரின் பேரில், குமரேசன் மீது காலாப்பட்டு போலீஸார், தேர்தல் விதி மீறல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai