சுடச்சுட

  

  அரசலாறு முகத்துவாரத்தை தூர்வாரும் பணியை விரைந்து தொடங்க வலியுறுத்தல்

  By காரைக்கால்  |   Published on : 27th April 2014 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி காரைக்கால் அரசலாறு முகத்துவாரத்தை உடனடியாக தூர்வார வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

  காரைக்கால் அரசலாறு - முல்லையாறு இணையுமிடத்தில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. அரசலாற்றின் முகத்துவாரம் வழியாகதான் படகுகள் கடலுக்கு சென்று திரும்ப வேண்டும். கடல் அலையால் மணல் திட்டு உருவாகி, படகு போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கூறி வருகின்றனர்.

  தற்போது 45 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணியை புதுச்சேரி அரசு நிர்வாகம் உடனடியாக தொடங்க வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

  இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி மீனவரணித் தலைவர் ரவி என்கிற நடராஜன் சனிக்கிழமை கூறியது: காரைக்காலில் சுமார் 300 விசைப்படகுகள் பயன்பாட்டில் உள்ளன.

  தினமும் படகுகளை கடலுக்குள் கொண்டு சென்று திரும்பும்போது, முகத்துவாரத்தில் மணல் திட்டு உருவாகியிருப்பதால் படகை இயக்கி வருவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணியை தொடங்க வேண்டுமென வலியுறுத்தினோம். பொதுப் பணித் துறை இதற்கென நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

  படகுகள் ஓய்வில் இருக்கும் இந்த நாள்கள் முகத்துவாரத்தை தூர்வாருவதற்கு ஏற்ற பருவமாகும். அரசு நிர்வாகம், நிதியை ஒதுக்கீடு செய்திருந்தால் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai