சுடச்சுட

    

    புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் சிவராஜன் (52). உடல் நலக்குறைவால் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த அவர், மருத்துவமனை கழிப்பறையில் வேட்டியால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இச்சம்பவம் குறித்து பெரியகடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai