சுடச்சுட

  

  இந்தியா-இங்கிலாந்து இடையே சுகாதாரத் துறையில் நெருங்கிய ஒத்துழைப்பு: பிரிட்டிஷ் துணைத் தூதர்

  By புதுச்சேரி,  |   Published on : 27th April 2014 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுகாதாரத் துறையில் இந்தியா-இங்கிலாந்து இடையே நெருங்கிய ஒத்துழைப்பு நிலவுவதாக இங்கிலாந்து நாட்டுக்கான துணைத் தூதர் பரத் சுரேஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.

  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனைத் தலைவர் டாக்டர் மகராஜ் கிஷான் பான் தலைமை வகித்தார். பட்டம் மற்றும் பட்டமேற்படிப்பு, பிஎச்டி பாடப்பிரிவுகளில் 368 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி துணைத் தூதர் பரத் சுரேஷ் பேசியதாவது:

  ஜிப்மர் மருத்துவமனை இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த மருத்துவமனையுடன் எங்கள் நாட்டுக்கு நெருக்கமான தொடர்பு உள்ளது.

  இங்கிலாந்து நாட்டு சுகாதாரத் துறை, இந்தியாவிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து

  கொண்ட முதல் மருத்துவமனை ஜிப்மர் தான். இங்கு 99 சதவீதம் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. இங்கு சர்வதேச பொது சுகாதாரப் பள்ளி தொடங்கப்பட உள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

  இந்தியாவில் அதிக முதலீடு செய்ய இங்கிலாந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா இடம் பெற எங்கள் பிரதமர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

  தற்போது 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு 1000 பேருக்கு உதவித் தொகைகளை அரசு வழங்குகிறது. இதுவரை 1047 கூட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

  இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்காக நிதியுடன் நிதியம் எனப்படும் 5 ஆண்டுகள் நிதியுதவி அளிக்க இங்கிலாந்து முன்வந்துள்ளது. இந்தியாவில் மூன்றாவது பெரிய முதலீட்டாளராக எங்கள் நாடு உள்ளது. தொழில்துறையில் 90 நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு

  மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையிலும் இந்தியாவுடன் நெருங்கிய ஒத்துழைப்பு நிலவுகிறது.

  கடந்த ஆண்டு இந்திய சுகாதாரத் துறை அமைச்சரும், இங்கிலாந்து சுகாதார அமைச்சரும்

  செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் சுகாதார மற்றும் மருத்துவ தொழில்நுட்பத்துறைக்கு இங்கிலாந்து உதவும்.

  மருத்துவத் துறையில் எங்கள் அனுபவங்கள், கற்றப் பாடங்களை இந்தியாவுடன் பகிர்ந்து

  கொள்வோம். அதே போல் குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளிப்பது குறித்து

  இந்தியாவிடம் நாங்கள் அறிந்து கொள்வோம். இங்கிலாந்தைச் சேர்ந்த 34 பேர் சுகாதாரத்துறைக்காக நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  மருத்துவத் துறையில் ரோபோட் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

  சிக்கலான அறுவை சிகிச்சைகளைக் கூட இதன் மூலம் மேற்கொள்ளலாம்.

  மருத்துவத் துறையில் தகவல்தொழில்நுட்பத் துறை மூலம் நோயாளிகளின் விவரங்களை மேலும் நவீன வகையில் பதிவு செய்து வைப்பது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்

  என்றார் பரத் சுரேஷ்.

  ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் டிஎஸ்.ரவிக்குமார் வரவேற்று பேசியது:

  ஜிப்மர் மருத்துவமனையில் தற்போது எம்.பி.பி.எஸ் பாடப்பிரிவில் 150 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். முதுநிலை பட்டமேற்படிப்பு பிரிவுகளில் தற்போது 165 பேர் சேர்க்கப்படுகின்றனர். இது வருங்காலத்தில் 200 ஆக உயரும். மாணவர்கள் வசதிக்காக புதிய மருத்துவமனை கட்டப்பட்டது. மேலும் ரூ.4 கோடி செலவில் நூலகம் நவீனமயமாக்கம், அறிவியல் இதழ்கள் வாங்கப்பட்டுள்ளன என்றார்.

  டீன் டாக்டர் எஸ்.மகாதேவன், பதிவாளர் டாக்டர் ஜேம்ஸ் டெரன்ஸ் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai