சுடச்சுட

  

  புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

  புதுவை காமராசர்நகர் வேல்சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடைபெறும் இவ்விழாவில் அறக்கட்டளை நிறுவனர் கலைமாமணி கோ.பாரதி தொடக்கவரை ஆற்றுகிறார்.

  தமிழ்மாமணி மன்னர் மன்னன் தலைமை வகிக்கிறார். வேல்சொக்கநாதன் முன்னிலை வகிக்கிறார்.

  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் முனைவர் அவ்வை நடராசனுக்கு பாராட்டு விழா நடக்கிறது.

  கலைமாமணி சுந்தரலட்சுமி நாராயணன், புலவர் ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். அவ்வை நடராசன் சிறப்புரை ஆற்றுகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai