சுடச்சுட

    

    வில்லியனூர் அருகே கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே கோபாலன் கடை அம்மா நகரைச் சேர்ந்த கபிரியேல். இவரது மனைவி லூர்துமேரி. தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர்களது மகள் லூய்சி (19). இவர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்ற அவர் மதியமே வீடு திரும்பினார். தனது அறைக்குச் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது தாய் உள்ளே சென்று பார்த்தபோது, லூய்சி நைலான் கயிற்றால் தூக்குப் போட்டுக்கொண்டது தெரியவந்தது.

    அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து லூய்சியை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. வில்லியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai