சுடச்சுட

    

    திருநள்ளாறு கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

    By காரைக்கால்  |   Published on : 27th April 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடை விடுமுறையின் காரணமாக, திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

    தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பேருந்து, வேன், கார்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பக்தர்கள் வரத் தொடங்கினர்.

    சனிக்கிழமை அதிகாலையிலேயே நளன் குளத்தில் பக்தர்கள் நீராடிவிட்டு, கோயில் நடை திறக்கும் முன்னரே நீண்ட வரிசையில் பிரதான சன்னதி தெருவில் குவிந்தனர்.

    நேரம் கடந்ததும் வடக்கு வீதி பகுதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கத் தொடங்கினர். இலவச தரிசனம் வரிசை மற்றும் கட்டண வரிசையில் கோயிலுக்குள் சென்று ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசித்து திரும்பினர்.

    சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    பக்தர்கள் கோரிக்கை : வெயில் கடுமையாக உள்ளதால் பக்தர்கள் வரிசையில் நிற்கும் பகுதியில் பந்தல் போடவேண்டும். பல்வேறு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் வளாகத்தில் கூடுதல் காவலர்களை பணியமர்த்தி பக்தர்கள் விரைவாக சுவாமியை தரிசித்து வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். சனிக்கிழமைகளில் மட்டுமாவது, காரைக்கால்-திருநள்ளாறு, திருநள்ளாறு-கும்பகோணம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai