சுடச்சுட

    

     புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கிறிஸ்தவ ஆலயம் வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது. இதையடுத்து கிறிஸ்துவர்கள் சனிக்கிழமை தவளக்குப்பம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    புதுவை கிறிஸ்தவ போதகர் அமைப்பு சார்பில் தவளக்குப்பம் சடா நகரில் தேவாலயம் கட்டப்பட்டு வந்தது. பணிமுடிவடையும் நிலையில் இருந்த இந்த ஆலயம், வெள்ளிக்கிழமை இரவு இடிக்கப்பட்டது. அங்கிருந்த வெல்டிங் இயந்திரம், பொருள்களும் திருடு போயுள்ளன.

    சனிக்கிழமை காலை அங்கு சென்று பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக ஆலய நிர்வாகி கிறிஸ்டோபர் தலைமையில் சென்று தவளக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் கிறிஸ்தவ அமைப்பினர் இச்சம்பவம் தொடர்பாக உடனே நடவடிக்கைக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், குடியிருப்புகளுக்கு நடுவே ஆலயம் கட்டப்பட்டு வந்தது. சுற்றுச்சுவர், உள்பகுதி ஆகியவை இடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டோரை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai