சுடச்சுட

    

    புதுச்சேரி தேங்காய்த்திட்டில் உள்ள ஆச்சார்யா பள்ளியில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

    ஆச்சார்யா பாலசிக்ஷô மந்திர் பள்ளி, செந்தில் மருத்துவமனை சார்பில் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான மருத்துவ முகாமை நடத்தின. ஆச்சார்யா கல்விக் குழும

    மேலாண் இயக்குநர் அரவிந்தன் முகாமைத் தொடங்கி வைத்தார். டாக்டர் மணிகண்டன் ஜோதி தலைமையில் 10 மருத்துவர்கள் கொண்ட குழு பொது மருத்துவம், அறுவைச் சிகிச்சை, மூட்டுவலி, கண், காது,மூக்கு, தொண்டை,

    மகளிர் நோய், குழந்தைகள் மருத்துவம், சர்க்கரை நோய், உள்ளிட்ட பிரிவுகளில் சோதனை செய்து சிகிச்சை அளித்தனர். 500-க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai