சுடச்சுட

  

  பாரதியார் பல்கலை. கூடத்துக்கு முதல்வரை நியமிக்கக் கோரிக்கை

  By புதுச்சேரி,  |   Published on : 27th April 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக் கூடத்துக்கு முதல்வரை நியமிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது.

  அக்கட்சியின் முருங்கப்பாக்கம் செயலாளர் அ.ஆல்பர்ட் புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

  புதுவை மாநிலத்தின் பெருமைக்குரிய அங்கமாக அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடம் உள்ளது. கலைகள் அனைத்தும் கற்பிக்கப்படும் சிறந்த இடமாக உள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் எங்கள் கட்சி இப்பல்கலைக்கூடத்தில் உள்ள நிர்வாகச் சீர்கேடுகள், குறித்து மாநில அரசுக்கு எடுத்துக் கூறி வருகிறோம்.

  ஆனால் புதுவை மாநில அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பல்கலைக்கூடத்தை நடத்துவதில் உள்ள குளறுபடிகளை போக்க உரிய கவனம் செலுத்தவில்லை.

  இதில் உள்ள பேராசிரியர்கள் சிலர் பல்கலைக்கழக மானிய விதிகளின்படி தகுதி பெறவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக அரசுத் தரப்பில் கூறபபட்டது.

  ஆனால் கடந்த 2.9.2011-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஆசிரியர்களை நியமிக்கும்போது பல்கலைக்கழக மானியக்

  குழு விதிகள், புதுச்சேரி பல்கலைக்கழக விதிகளை பின்பற்ற வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

  ஆனால் புதுச்சேரி அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பையே கருத்தில் கொள்ளவில்லை. மேலும்

  இப்பல்கலைக்கூடம் முதல்வர் இல்லாமல் இயங்கி வருகிறது. இதில் கொள்கை ரீதியில் உரிய முடிவெடுக்க வேண்டும். அப்போது தான் அனைத்து மாணவ, மாணவியருக்கும் தரமான கல்வியைப் பெற முடியும்.

  மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு பலகலைக் கூடத்தில் உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. எனவே மூத்த பேராசிரியர் ஒருவரை பல்கலைக்கூட

  முதல்வராக உடனே நியமிக்க புதுவை மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இல்லையென்றால் பல்வேறு வகைகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார் ஆல்பர்ட்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai