சுடச்சுட

  

  காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி அம்பாள் சமேத ஸ்ரீ பார்வதீஸ்வர சுவாமி கோயிலில் உலக அமைதி, மழை வேண்டி சனிக்கிழமை நடத்தப்பட்ட ருத்ர ஹோமத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

  பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலக அமைதி வேண்டியும், மழை வேண்டியும் ஸ்ரீ ருத்ரைகாதசினீ ஜப ஹோமம் என்கிற ஸ்ரீ ருத்ர ஹோமம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

  இதற்காக ஸ்ரீ ஞானசம்பந்த விநாயகர் கோயிலில் ஸ்ரீ மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை 7 மணிக்கு ருத்ர ஹோமம் தொடங்கியது. பல மணி நேரம் நடந்த ருத்ர பாராயணங்களுக்குப் பிறகு மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடத்தப்பட்டது. சுவாமிகளுக்கு கலசாபிஷேகம் நடத்தப்பட்டது.

  ஹோமத்தை பாலசர்வேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ பார்வதீஸ்வர சுவாமி கோயில் தனி அதிகாரி கோவி. ஆசைத்தம்பி செய்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai