சுடச்சுட

  

  விஞ்ஞானப்பூர்வ விசாரணை தேவை: சுயேச்சை வேட்பாளர் கோரிக்கை

  By புதுச்சேரி,  |   Published on : 27th April 2014 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து விஞ்ஞானப் பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என சுயேச்சை வேட்பாளரும், முன்னாள் எம்.பியுமான டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.

  இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்

  கூறியிருப்பது: இத்தேர்தலில் புதுச்சேரியில் 3 அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் அளித்து தேர்தலை சீர்குலைத்து விட்டன. இதன் மூலம் நேர்மையான மற்றும் நியாயமான தேர்தல் நோக்கம் தோல்வியடைந்து விட்டது.

  பணம் அளிப்பதும், பெறுவதும் தண்டனைக்குரிய குற்றமாக தேர்தல் ஆணையம்

  கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தேர்தல் முடிவு தார்மீக ரீதியில் சரியாக இருக்காது.

  எனவே தேர்தல் ஆணையம் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  புதுவையில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து விஞ்ஞானப்பூர்வ விசாரணையை நடத்த வேண்டும். இச்செயலில் ஈடுபட்டவர்களை மக்கள் முன் அடையாளம் காட்ட வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை தர வேண்டும்.

  வாக்காளர்களுக்கு பணம் தந்த பிரச்னை உண்மையாக இருக்கும்பட்சத்தில் தற்போது நடந்த தேர்தலை ரத்து செய்து புதிதாக தேர்தலை நடத்த வேண்டும் என

  தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai