சுடச்சுட

  

  வில்லியனூர் லூர்தன்னை மாதா ஆலயப் பெருவிழா கொடியேற்றம்

  By புதுச்சேரி,  |   Published on : 27th April 2014 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் பிரசித்தி பெற்ற லூர்தன்னை மாதா ஆலய 137-வது ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  பிரான்ஸ் நாட்டின் லூர்து நகருக்கு பின் உலகிலேயே லூர்து மாதாவுக்கு என கட்டப்பட்ட இரண்டாவது தேவாலயம், வில்லியனூர் மாதா ஆலயமாகும். போப் ஆண்டவரால் மூடிசூடப்பட்ட சில சொரூபங்களில் வில்லியனூர் மாதாவும் ஒன்றாகும்.

  தமிழக பண்பாட்டின்படி தேவாலயம் முன்பு இயற்கையாக குளம் அமைந்துள்ளது, இதன் சிறப்பாகும்.

  பழமை வாய்ந்த லூர்தன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை முடிந்ததும் ஆண்டு தோறும் பெருவிழா நடைபெறும். நடப்பாண்டு ரூ.7 லட்சம் செலவில் புதிதாக 63 அடி உயர கொடிமரம் நிறுவப்பட்டுள்ளது.

  அதன்படி இந்த ஆண்டின் பெருவிழாவை கேரள மாநிலம் சுல்தான்பேட்டை மறைமாநில புதிய ஆயர் டாக்டர் பீட்டர் அபீர் சனிக்கிழமை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

  இதனை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு ஆலய வளாகத்தில் உள்ள ஜெப மண்டபத்தில் திருப்பலி நடைபெற்றது. பின் மாதா குளத்தை சுற்றி திருக்கொடி பவனி நடந்தது.

  மேலும் திருவிழா நாள்களில் மாலையில் திருப்பலி, மறையுரை தேர்பவனி போன்றவை நடைபெறும். வரும் மே மாதம் 4 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் டாக்டர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.

  இரவு 7.30 மணிக்கு ஆடம்பரத் திருவிழா தேர்பவனி நடக்கிறது. 5-ம் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு பின் கொடியிறக்கத்துடன் ஆண்டு விழா நிறைவடைகிறது. ஆண்டுப் பெருவிழாவின் ஏற்பாடுகளை பங்குத்தந்தை ரிச்சர்ட் அடிகளார் செய்திருந்தார். ஏராளமான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai