சுடச்சுட

  

  தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்ற வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் 144 தடையுத்தரவு நீடிக்கிறது. ஊராட்சி அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்களித்தோர் மீது தாக்குதல் நடத்தியதாக ஊராட்சித் தலைவர் உள்பட 41 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  புதுவை மாநிலம் வீராம்பட்டினம் மீனவர் கிராமத்தில், சுனாமி வீடுகள் கட்டித்தரப்படவில்லை. இதையடுத்து வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம், குடியரசு தினத்தில் கடலில், படகில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் ஆகியவற்றை நடத்தினர். இதையடுத்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர். வேட்பாளர்களையும் இக்கிராமத்தில் பிரசாரம் செய்ய மக்கள் அனுமதிக்கவில்லை.

  37 சதவீத வாக்குப்பதிவு: வாக்குப்பதிவு நாளுக்கு முன்பு மீனவர் தகவல் மையம் சீல் வைக்கப்பட்டது. வீராம்பட்டினத்தில் உள்ள 5 வாக்குச்சாவடிகள் தேர்தல் நாளில் காலியாக இருந்தன.

  பின்னர் பிற்பகலில் சிலர் வாக்களித்தனர். இதனால் இப்பகுதியில் மட்டும் 37 சதவீத வாக்குப்பதிவானது. மொத்தமுள்ள 4,676 வாக்காளர்களில் 1443 பேர் வாக்களித்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

  41 பேர் மீது வழக்கு: இந்நிலையில் வீராம்பட்டினத்தில் வாக்களித்தோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இதையடுத்து வீராம்பட்டினம் மீனவ பஞ்சாயத்து தலைவர் விசுவநாதன், நிர்வாகி கலிவரதன் உள்பட 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக அரியாங்குப்பம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

  ஊராட்சி அலுவலகத்துக்கு சீல்: இந்நிலையில் வீராம்பட்டினம் பஞ்சாயத்து அலுவலகம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், மைக் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் வந்த தகவலால் பஞ்சாயத்து அலுவலகம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவு வீராம்பட்டினத்தில் நீடிக்கிறது என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

  மீனவர்கள் வட்டாரங்கள் கூறியதாவது: பஞ்சாயத்தார் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் எங்கள் கிராமத்துக்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை நீக்க வேண்டும். பஞ்சாயத்து அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

  துப்பாக்கி போலீஸ் குவிப்பு: தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

  தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினருடன் துணை ராணுவத்தினரும் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு

  வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai