சுடச்சுட

  

  அரசலாறு முகத்துவாரத்தைத் தூர்வார நடவடிக்கை

  By காரைக்கால்  |   Published on : 28th April 2014 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : மீன்பிடித் தடைக்காலம் முடிவதற்குள் அரசலாறு முகத்துவாரம் தூர்வாரப்படும் என புதுச்சேரி அரசு மீன்வளத் துறை செயலர் எஸ். சுந்தரவடிவேலு தெரிவித்தார்.

  காரைக்கால் மீன்வளத் துறை அலுவலகத்திற்கு சனிக்கிழமை வந்த அவரை மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, மணல் திட்டுகளால் அடைபட்டிருக்கும் அரசலாறு முகத்துவாரத்தைத் தூர்வார வேண்டும். மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு தரப்படும் நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

  துறைமுகக் கட்டடங்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். துறைமுகப் பகுதியிலேயே கேன்டீன், படகுக்கான பொருள்கள் விற்பனை அங்காடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இடநெரிசல் இருப்பதால் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.இதைத்தொடர்ந்து, துறைமுகத்திற்குச் சென்ற செயலர் எஸ். சுந்தரவடிவேலு, படகுகள் கட்டப்பட்டிருக்கும் இடத்தையும், துறைமுகத்தில் பயன்பாட்டில் இல்லாத கட்டடங்களையும் பார்வையிட்டார்.

  பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

  ரூ. 47 கோடி திட்டத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டு மீனவர்கள் பயன்பாட்டில் உள்ளது. படகுகள் கடலுக்கு சென்று திரும்ப ஏதுவாக அரசலாறு முகத்துவாரத்தை ஆழப்படுத்த அரசு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போது 45 நாள் மீன்பிடித் தடைக்காலம் உள்ள நிலையில், தடைக்காலம் முடிவதற்குள் அந்தப் பணிகள் செய்து முடிக்கப்படும்.

  துறைமுகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள டீசல் விற்பனை நிலையம் விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 150 லிட்டர் மானிய டீசல் தரப்படுகிறது. மானியம் அல்லாத டீசல் கூடுதலாக 150 லிட்டர் தேவைப்படுவதாகக் கூறுகிறார்கள். அதையும் இங்கேயே வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். துறைமுகத்தில் பயன்பாட்டில் இல்லாத கட்டடங்கள் படிப்படியாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai