சுடச்சுட

  

  காகிதம் சேகரிக்கும் பெண்களிடம் போலீஸார் விசாரணை

  By புதுச்சேரி  |   Published on : 28th April 2014 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரி அருகே தனியார் நிறுவனப் பகுதியில் சுற்றித் திரிந்த 3 பெண்களை திருட வந்தவர்கள் என நினைத்து, பொதுமக்கள் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர். பின்னர், அவர்கள் பழைய காகிதம் சேகரிக்க வந்தவர்கள் எனத் தெரியவந்தது.

  புதுவை கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், வீடுகளில் பொருள்கள் திருட்டு போய் வந்தன. இந்நிலையில் சனிக்கிழமை இரவு அப்பகுதியிலுள்ள கொசுவர்த்தி சுருள் தயாரிக்கும் நிறுவனம் அருகே ஐந்து பெண்கள் நடமாடியுள்ளனர். அதையடுத்து அப்பகுதி மக்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது இரு பெண்கள் அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏறி தப்பி விட்டனர். மீதமிருந்த 3 பேரையும் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

  கரிக்கலாம்பாக்கம் காவல் துறையினரிடம் இச்சம்பவம் குறித்து கேட்டதற்கு, பிடிபட்ட பெண்கள் புதுவை புதிய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள பிளாட்பாரத்தில் வசிப்பவர்கள் என தெரிவித்தனர். காகிதம் சேகரிக்கும் கூலித் தொழிலாளிகள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

  திருட்டு குற்றம் புரிந்ததாக தெரியவில்லை. எனினும், நள்ளிரவு நேரத்தில் அப்பகுதிக்குள் வந்தது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai