சுடச்சுட

  

  காரைக்காலில் வாக்காளர் பட்டியலை முறையாக தயார்படுத்தவில்லை: பாஜக

  By காரைக்கால்,  |   Published on : 28th April 2014 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் தேர்தல் நிர்வாகம் வாக்காளர் பட்டியலை முன்கூட்டியே முறையாக தயார்படுத்தவில்லை

  என பாஜக புகார் கூறியுள்ளது.

  இதுகுறித்து பாஜக புதுவை மாநிலச் செயலாளர் எம். அருள்முருகன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

  காரைக்கால் மாவட்டத்தில் 1.50 லட்சம் வாக்காளர்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் பெயர்கள் ஏராளமாக உள்ளன. மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, வாக்குச்சாவடியை மாற்ற விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு இடங்களிலும் பெயர் உள்ளது. இதை தேர்தல் நிர்வாகம் திருத்தப் பணியின்போதே, உரிய முறையில் விசாரணை நடத்தி பட்டியலில் இருந்து நீக்கியிருக்க வேண்டும்.

  வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் உள்ளோரின் விவரத்தை சரிபார்க்க தேர்தல் நிர்வாகம் தவறிவிட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இக்குறைபாடுகள் குறித்து கூறப்பட்டும் தேர்தல் நிர்வாகம் ஏற்காதது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற குறைபாடுகளை தவிர்த்திருந்தால் 85 சதவிகிதத்துக்கும் மேலாக வாக்குகள் கிடைத்திருப்பது உறுதியாகியிருக்கும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai