சுடச்சுட

  

  காரைக்கால் அருகே வீடு தீக்கிரையானதில் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

  காரைக்கால் அருகே உள்ள நடுக்களம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமேரி. கூலித் தொழிலாளி. இவர் ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலுக்கு சென்றுவிட்டார். அப்போது அவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்துள்ளது.

  தீயை அணைக்க முயற்சி செய்த அப்பகுதியினர், காரைக்கால் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

  தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும், ஜெயமேரியின் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.

  வீட்டில் இருந்த நெல் கொட்டிவைக்கும் பத்தாயம், வீட்டு உபயோகப் பொருள்கள், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை தீயில் கருகின. சேத மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாமென கூறப்படுகிறது. நிரவி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai