சுடச்சுட

  

  காரைக்கால் ஸ்ரீ பார்வதீஸ்வரசுவாமிஸ்ரீ சுயம்வர தபஸ்வினி திருக்கல்யாணம்

  By காரைக்கால்,  |   Published on : 28th April 2014 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்கால் ஸ்ரீ பார்வதீஸ்வரசுவாமி கோயிலில் உலக அமைதி வேண்டி நடந்த ருத்ர ஹோமத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி அம்பாள் சமேத ஸ்ரீ பார்வதீஸ்வரசுவாமி கோயில் அமைந்துள்ளது. இது கி.பி. 6-ம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ பார்வதீஸ்வரர். இந்தக் கோயிலில் உலக அமைதி வேண்டியும், மழை பெய்து பயிர் வளம் வேண்டியும் ஸ்ரீ ருத்ர ஹோமம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதன் நிறைவாக சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சுவாமி அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai