சுடச்சுட

  

  மீனவர் பிரிவுப் தலைவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப் பரிந்துரை

  By புதுச்சேரி  |   Published on : 28th April 2014 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் புறக்கணிப்புப் பிரச்னை ஏற்பட்ட வீராம்பட்டினம் மீனவ பஞ்சாயத்தைச் சேர்ந்த 3 தலைவர்கள், புதுச்சேரியில் நுழைய தடை விதிக்க வேண்டும் என காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

  வீராம்பட்டினம் கிராமத்தில் சுனாமியால் பாதித்த மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படவில்லை எனக்கூறி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

  கடந்த 24 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவின்போது, ஒரு தரப்பினர் வாக்களிக்க முயன்றனர். இதற்கு மீனவ பஞ்சாயத்துத் தலைவர் விஸ்வநாதன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இதனால் அங்கு மோதல் ஏற்பட்டு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக 40 பேர் மீது அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

  இந்நிலையில், இப்பஞ்சாயத்தைச் சேர்ந்த மீனவர் பிரிவு தலைவர்கள் விஸ்வநாதன், கலிவரதன், பாஸ்கர் ஆகியோரை புதுச்சேரி பகுதியில் 2 மாதங்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என அரியாங்குப்பம் போலீஸ் எஸ்.ஐக்கள் பாபுஜி, சத்தியா ஆகியோர் துணை நீதித்துறை நடுவர் வின்சென்ட் ராயருக்கு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  இதுதொடர்பாக வின்சென்ட் ராயர் கூறியது: போலீஸாரின் பரிந்துரையை நான் பார்க்கவில்லை. இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினமாகும். திங்கள்கிழமை சென்று போலீஸாரின் பரிந்துரையை பார்த்து மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai