சுடச்சுட

    

    தேர்தல் விதியை மீறியதாக முன்னாள் எம்பி எம். ராமதாஸ் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    புதுவை மக்களவைத் தேர்தலில் முன்னாள் எம்பி ராமதாஸ் சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் பிரசாரத்தில் பொதுமக்களுக்கு வழங்கிய துண்டுப் பிரசுரத்தில் அச்சகத்தின் பெயர், எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை. இது தேர்தல் நடத்தை விதியை மீறிய செயலாகும்.

    இதையடுத்து தேர்தல் அலுவலரும் துணை வட்டாட்சியருமான செந்தில்நாதன் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தந்திருந்தார். அதன் அடிப்படையில் தேர்தல் விதிகளை மீறியதாக ராமதாஸ் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai